இலங்கையில் இருந்து தஞ்சம் தேடி வயதான தம்பதி தமிழகம் வந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டை சேர்ந்த பலர் தமிழகத்துக்கு அகதிகளாக வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 27 ம் திகதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் அருகே முதிய தம்பதி மயங்கிய நிலையில் கிடந்தனர்.
மரைன் பொலிசார் சென்று உணவு, குடிநீர் வழங்கி மீட்டு விசாரித்தனர். அவர்கள் இலங்கை மன்னாரை சேர்ந்த பெரியண்ணன் (82 ) பரமேஸ்வரி (70 ) என்பது தெரியவந்தது.
இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூழலில் இன்று பரமேஸ்வரி மருத்துவமனையில் இறந்தார். அவரது கணவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.