TNUSRB Police exam How to prepare in Tamil: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எவ்வாறு தயாராகுவது என்பதை இப்போது பார்ப்போம்.
காவலர் பணியிடங்களுக்கான தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 40% மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். இல்லையென்றால், முதன்மை தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. இந்த பகுதி 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
இதையும் படியுங்கள்: தற்காலிக ஆசிரியர் நியமனம்; ஜூலை 4 முதல் விண்ணப்பம்; திருத்திய வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழ் மொழி தகுதித் தேர்வு
இலக்கணம் – எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு
இலக்கியம் – திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவை
தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் – தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு
முதன்மை எழுத்துத் தேர்வு
இரண்டாம் பகுதியாக முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் பெறக் கூடிய மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அடுத்த செயல்முறைக்கு தகுதி செய்யப்படுவார்கள். இது 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
இதில் பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம் பெறும்.
பொது அறிவு – இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும்.
உளவியல் – தொடர்பு அல்லது தொடர்புகொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
இவற்றில், தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக புக் பேக் கொஸ்டின் மற்றும் அடைப்புக்குள் உள்ள தகவல்களையும் நன்றாக படித்துக் கொள்ள வேண்டும்.
உளவியலில், கணித பகுதியில் படிக்க வேண்டிய முக்கியமான தலைப்புகளை இப்போது பார்ப்போம்.
சுருக்குக, மீ.பெ.வ & மீ.சி.ம, எண்ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்குகள், லாபம் & நட்டம், நேரம் & வேலை, சங்கிலி தொடர், குழாய் & தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டு வட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு ஆகியவை கணிதப் பகுதியில் கேட்கப்படும் முக்கிய தலைப்புகளாகும்.
இவற்றை 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி கணித பாடங்களில் இருந்து, படித்துக் கொள்ளுங்கள்.