ரஷ்யாவின் பிரபல விஞ்ஞானி ஒருவர், தேசத்துரோகி என கைது செய்யப்பட்ட இரண்டாவது நாளில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் பிரபல விஞ்ஞானிகளில் ஒருவரான 54 வயது Dmitry Kolker என்பவர் வெள்ளிக்கிழமை மாஸ்கோவின் மிகக் கொடூரமான சிறைச்சாலையில் மரணமடைந்துள்ளார்.
சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் அவரது குடும்பத்தினர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
லேஸர் விஞ்ஞானி Dmitry Kolker சமீப நாட்களாக விளாடிமிர் புடினின் நம்பிக்கைக்குரிய உளவுப்படையால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.
குறித்த உளவுப்படையே சித்திரவதை செய்து கொன்றுள்ளதாக விஞ்ஞானி Dmitry Kolker-ன் குடும்பம் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.
புற்றுநோயாளியான Dmitry Kolker மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையிலேயே உளவுப்படையால் கைதாகியுள்ளார்.
ஆனால், மருத்துவ நிர்வாகத்தின் அனுமதியுடனே Dmitry Kolker-ஐ கைது செய்துள்ளதாக உளவுப்படை தெரிவித்துள்ளது.
சீனாவுக்காக ரஷ்யாவில் உளவு வேலையில் ஈடுபட்டதாகவே ரஷ்யா தரப்பில் Dmitry Kolker மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவருடன் கைதான இன்னொரு நிபுணர் தற்போதும் சிறையில் உள்ளார்.
விஞ்ஞானி Dmitry Kolker-கு நெருக்கமான வட்டாரத்தில், சீனா உளவு என்பது பொய்யான குற்றச்சாட்டு என்றே கூறுகின்றனர்.