பூமியை நெருங்கும் எவரெஸ்டை விட பெரிய வால் நட்சத்திரத்தினால் ஆபத்து உள்ளதா…

வால் நடத்திரம் என்பது சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். வால் நட்சத்திரங்களின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால் நடசத்திரங்களும் சூரியனைச் சுற்றுகின்றன.  

இந்நிலையில், எவரெஸ்டை விட இரு மடங்கு பெரிய அளவிலான வால் நட்சத்திரம் ஒன்று ஜூலை 14 அன்று பூமிக்கு மிக அருகில் வரும் என கூறப்பட்டுகிறது. பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரத்திற்கு C/2017 K2 (PANSTARRS) அதாவது K2 என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த வால் நட்சத்திரம்  முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு காணப்பட்டது.  இது இப்போது பூமியை நோக்கி நகர்கிறது. பூமிக்கு எந்த அளவிற்கு ஆபத்து என்பதை தெரிந்து கொள்வோம்.

முதன்முதலில் 2017ம் ஆண்டு கண்டறியப்பட்ட வால் நட்சத்திரம்

வால் நட்சத்திரம் முதன்முதலில் 2017 இல் காணப்பட்டபோது, ​​அதற்கு K2 என்று பெயரிடப்பட்டது என Space.com என்ற தளத்தில் வெளியான அறிக்கை கூறுகிறது. ஜூலை 14 அன்று அது நமது கிரகத்திற்கு மிக அருகில் நெருங்கும் போது, ​​வால் நட்சத்திரம் பூமியிலிருந்து 168 மில்லியன் மைல்கள் (270 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும்.

மேலும் படிக்க | Sunspot AR30398: பூமியை மிக மோசமாக தாக்கும் சூரிய எரிப்பு

ஆன்லைனில் பார்க்கலாம்

மெய்நிகர் தொலைநோக்கி திட்டத்தின் நேரடி வெப்காஸ்ட் மூலம் மக்கள் அதை ஆன்லைனில் மாலை 6:15 மணி முதல் பார்க்க முடியும். இந்த வால் நட்சத்திரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து பூமியை நோக்கி நகர்கிறது. பெரும்பாலும் உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசிகளால் ஆன வால் நட்சத்திரங்கள் சூரியனை நெருங்கும் போது சுறுசுறுப்படைகின்றன. சூரியனின் வெப்பம் வால் நட்சத்திரத்தை மிக விரைவாக சூடுபடுத்துகிறது, இதனால் அதன் திடமான பனி நேரடியாக வாயுவாக மாறி கோமா எனப்படும் வால் நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு மேகத்தை உருவாக்குகிறது.

இந்த வால் நட்சத்திரம் ஏற்கனவே ஆக்டிவ் ஆக இருந்தது

சூரியனில் இருந்து சுமார் 1.49 பில்லியன் மைல்கள் (2.4 பில்லியன் கிமீ) தொலைவில் உள்ள சனி மற்றும் ராகுவின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது K2 ஏற்கனவே ஆக்டிவ் ஆக இருந்தது. கனடா-பிரான்ஸ்-ஹவாய் தொலைநோக்கி (CFHT) K2 என்னும் வால் நட்சத்திரத்தின் உட்கரு 18 முதல் 100 மைல்கள் (30 முதல் 160 கிமீ) அகலமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தது.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் உதிக்கும் சூரியன் நாசாவின் அரிய புகைப்படம்

சூரிய குடும்பத்தை நோக்கி நகரும் வால் நட்சத்திரம்

இந்த வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தை நோக்கி நகர்வதால், மிக வேகமாக பூமியை நோக்கி வருகிறது. ஜூலை 14 அன்று, இந்த வால் நட்சத்திரம் 8 அல்லது 7 அளவுகளில் பிரகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது துரதிருஷ்டவசமாக, இன்னும் பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக உள்ளது.

 எனினும் இந்த பிரம்மாண்ட வால் நட்சத்திரத்தினால் பூமிக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு NASA தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.