கேரளாவில், தனியார் பேருந்து பக்கவாட்டில் உரசியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், அதில் பயணித்த தந்தை, மகள் நூலிழையில் உயிர்தப்பிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நென்மாரா பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், தனது மகளுடன் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற போது பக்கவாட்டில் வந்த பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது உரசியது.
இதில் நிலைதடுமாறி சுரேஷ்குமாரும் அவரது மகளும் பேருந்தின் சக்கரத்துக்கு அருகில் விழுந்த நிலையில், சுரேஷ்குமாரின் கை மீது பேருந்தின் முன்சக்கரம் ஏறி, இறங்கியது.