இன்றைய காலக்கட்டத்தில் படிப்பதை காட்டிலும் நல்ல வேலையை தேடிக் கொள்வதே மிக கடினமான விஷயமாக இருக்கிறது. அதிலும் கொரோனாவின் வருகைக்கு பிறகு, இது இன்னும் கடினமாகியுள்ளது. நிறுவனங்கள் ஊழியர்களை பணியமர்த்த கடினமான வழிகளை மேற்கொள்கின்றன. நல்ல மல்டி திறன்களை கொண்ட ஊழியர்களை பணியமர்த்த திட்டமிடுகின்றன.
குறிப்பாக பல நிறுவனங்களும் பிரெஷ்ஷர்களை பணியமர்த்த தயக்கம் காட்டி வருகின்றன.
இப்படி பல காரணங்களுக்கு மத்தியில் லண்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கான சரியான வேலையை தேட, தனித்துவமான வழியினை கண்டுபிடித்துள்ளார்.
Linkedin மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? சாதித்து காட்டிய தூத்துகுடி இளைஞர்!
பொருளாதாரம் படிக்கும் மாணவர்
ஜார்ஜ் கோர்னியூக் என்ற 21 வயதான இளைஞர், நிறுவனங்களை கவரும் விதமாக புதுமையான முயற்சியினை எடுத்துள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள செயின்ட் எட்மண்ட் கல்லூரியில் பொருளாதாரம் படிக்கும் கோர்னியூக், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் அனுபவம் பெறலாம் என நம்புகிறார்.
எல்லாம் டெக்னாலஜி
பல இடங்களில் தனது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், விரக்தியடைந்துள்ளார். இந்த நிலையில் நிறுவனங்களை கவர வித்தியாசமான முறையை கையாள திட்டமிட்டுள்ளார்.
அதன் படி ஒரு பலகையில் கியூ ஆர் கோடுகளை ஒட்டியுள்ளார். இதன் மூலம் தேவையானவர்கள் ஸ்கேன் செய்து அதன் மூலம் தனது CV- ஐ படித்துக் கொள்ளலாம். அதோடு லிங்க்ட் இன் மூலம் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
ஏன் இந்த திட்டம்
இது குறித்து கோர்னியூக் சில வருடங்களுக்கு முன்பு லண்டனில் ஒரு இளைஞன், கியூஆர் கோடினை பயன்படுத்திய கதையை படித்திருக்கிறேன். இது எனக்கு திடீரென உதித்தது.
ஒரு வாரத்தில் 20வது நிராகரிப்பினை கண்ட நான், எதையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என திட்டமிட்டேன். நேரடியாக நிறுவனர்களை அணுக முடியாத சூழலில், அவர்களை சென்றடைவது கடினம்.
உலகுக்காக திறந்திருங்கள்
வேலை விண்ணப்ப முறையானது எண்கள் மற்றும் காகிதத்தினை விட சற்று சிக்கலானது. எனவே எனது திறனை காட்ட திட்டமிட்டேன், அதிகாரிகளை கவர திட்டமிட்டேன். மெயில் அனுப்பும்போது அவர்கள் தொடர்பு கொள்ள கூறலாம். எனினும் அது சலிப்பானதாக இருக்கும், நான் அதனை செய்ய விரும்புகிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் என்னை வெளியே கொண்டு வர விரும்புகிறேன். உலக்குகாக திறந்திருங்கள் என்றும் கூறியுள்ளார்.
எல்லாம் டெக்னாலஜி
கோர்னியூக் இன்னும் சரியான வாய்ப்பினை தேடிக் கொண்டுள்ளார். அக்டோபர் 1வரை தனது படிப்பு மீண்டும் தொடங்கும் வரை தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற சம்பவங்கள் புதிதில்லை எனலாம். கடந்த ஆண்டு ஹைதர் மாலிக் என்ற இளைஞர் ஒருவர், இதேபோன்று கியூ ஆர் கோடுகளை பதிவிட்டார். எல்லாம் டெக்னாலஜி பாஸ் டெக்னாலஜி..
Is this a super idea to find a job: all technology
Is this a super idea to find a job: all technology/பையன் புடிச்சிட்டான் எல்லாம் டெக்னாலஜி.. செம ஐடியா..?!!