நுவரெலியா- இராகலை நடுக்கணக்கு நகரில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கப்
போராட்டமே சிறந்த வழியென மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் வீதிப்
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டம் இன்று மாலை
முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் போராட்ட மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தை
முன்னிலை சோஷலிசக் கட்சி மற்றும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர்
தலைமை தாங்கி நடத்தினர்.
கோட்டாபய உருவ பொம்மையை தூக்கில் ஏற்றிய மக்கள்(Video) |
நாட்டில் தொடரும் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்க்கு எதிராகவும், அவரின்
குடும்ப அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் கோஷமிட்டு எதிர்ப்பு வாசகங்கள்
எழுதப்பட்ட சுலோகங்களைப் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தேசிய
அமைப்பாளர் வை.மகேந்திரன், முன்னிலை சோஷலிசக் கட்சியின் சரிந்த பியலால், தோட்ட
சேவையாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் நிஸாந்த காந்தவராச்சி மற்றும்
ஒன்றிணைந்த ஆசிரியர் சங்க அமைப்பாளர் ஹரிச விஜயசந்தர ஆகியோர் மக்கள்
முன்னிலையில் உரையாற்றியுள்ளனர்.
கண்டி
கண்டி- நாவலப்பிட்டி நகரில் அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் அத்தியாவசியப் பொருட்களின்
தட்டுபாடு மற்றும் விலையேற்றத்துக்கும் நிரந்தர தீர்வு கோரி இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
இதில் பல தரப்பினரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,