பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ். இவரது மனைவி திவ்யபாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்;த நிலையில், கடந்த திங்கட்கிழமை பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து தாய் சேய் இருவரும் சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், இன்று அதிகாலை மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மகப்பேறு நல பிரிவு கட்டிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.
குழந்தை விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்டதா அல்லது வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடத்தப்பட்ட சம்பவம் அறிந்து குழந்தையின் உறவினர்கள் தற்போது அரசு மருத்துவமனையை முன்பு முற்றுகையிட்டுள்ளனர் இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM