உலகெங்கிலும் விநோத செயல்கள் அரங்கேறுவது உண்டு. சம்பிரதாயம் என்று கூறி மனிதனுக்கும் கழுதைக்கும் திருமணம், மனிதனுக்கும் தவளைக்கும் திருமணம் என ஏகப்பட்ட விஷயங்கள் அப்படி நடக்கும்.
அதேசமயம் ஆபத்தான விலங்குகளிடம் மனிதர்கள் அந்த சம்பிரதாயத்தை காண்பிக்கமாட்டார்கள். ஆனால் மெக்சிகோவல் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
மத்திய மெக்சிகோவில் இருக்கும் சான் பெட்ரா ஹவுமெலுலா என்ற நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் 7 வயதுடைய முதலையை திருணம் செய்திருக்கிறார்.
In an age-old ritual, a Mexican mayor married his alligator bride to secure abundance. Victor Hugo Sosa sealed the nuptials by kissing the alligator’s snout https://t.co/jwKquOPg93 pic.twitter.com/Vmqh4GpEJu
— Reuters (@Reuters) July 1, 2022
திருமணத்தின்போது முதலைக்குட்டிக்கு வெள்ளை நிற கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த முதலைக்கு முத்தம் கொடுத்து இந்தத் திருமணத்தை அவர் செய்துள்ளார்.
மேலும் படிக்க | வளைகுடா பகுதிகளின் விமான கட்டணங்களில் கடும் ஏற்றம்: நடவடிக்கை தேவை என எம்பி கோரிக்கை
இந்தத் திருமணம் முடிந்த பிறகு முதலையை தோளில் சுமந்து மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்தியாவில் மழைக்காக நடக்கும் சம்பிரதாயம் போல மெக்சிகோவின் பழங்குடி மக்கள் இந்தச் சடங்கை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கடைப்பிடித்துவருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அபுதாபியில் அசத்தும் இந்திய பள்ளி: மதிப்பெண்களை அள்ளிய 49 மாணவர்களுக்கு கோல்டன் விசா
விக்டர் இத்திருமணம் குறித்து கூறுகையில், “இயற்கையிடம் மழை, உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வேண்டி பிரார்த்தித்து இந்த சடங்கை செய்கிறோம். இது காலம் காலமாக நாங்கள் பின்பற்றிவரும் நம்பிக்கை” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR