சேலம் மாவட்டம் மேட்டூரில், கெட்டுப்போன மற்றும் ரசாயனம் கலந்து விற்பைனக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ மீன்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
மேட்டூர் அணையின் பூங்காவிற்கு எதிரேயுள்ள சாலையோர கடைகளில் சுகாதாரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், ரசாயனம் கலந்த மீன்களை பறிமுதல் செய்தனர்.