ரஷ்ய நகரில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த ஷெல் தாக்குதல்: பரபரப்பு வீடியோ காட்சிகள்



உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் மூன்று பேர் வரை கொல்லப்பட்டதுடன், டஜன் கணக்கான வீடுகள் சேதமடைந்து இருப்பதாக அந்த பகுதியின் பிராந்திய ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் எல்லைக்கு வடக்கே சுமார் 40கிமீ தொலைவில் உள்ள பெல்கோரோட் நகரத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக அந்த பகுதியின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

பெல்கோரோட் எல்லையில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், குறைந்தது 11 அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் 39 வீடுகள் வரை பலத்த சேதமடைந்து இருப்பதாக கிளாட்கோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நகரத்தில் நடைபெற்ற இந்த ஷெல் தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யாவின் மூத்த சட்டமியற்றுபவர் Andrei Klishas குற்றம் சாட்டினார்.

மேலும் பொதுமக்களின் மரணம் மற்றும் பெல்கோரோட் மக்களின் உள்கட்டமைப்பு அழிப்பு ஆகியவை உக்ரைனின் நேரடி ஆக்கிரமிப்பு செயலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

போர் தொடங்கிய பிப்ரவரி 24ம் திகதியில் இருந்தே, ரஷ்யாவின் மேற்கு எல்லை நகரமான பெல்கோரோட் பகுதியில் பல தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரஷ்யா, உக்ரைன் மீது குற்றம் சாட்டி வருகிறது.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் வணிக வளாகத்தில் நிறைவடைந்த மீட்பு பணி: இறப்பு எண்ணிக்கை தெளிவில்லாத அவலம்

ஆனால் இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு பொறுப்பேற்காத உக்ரைன், இதனை ரஷ்யாவின் செயலுக்கு திருப்புச் செலுத்துதல் மற்றும் கர்மா என தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.