நுகர்வோருக்கு துரிதமாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக நுகர்வோருக்கு துரிதமாக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலவாணி நெருக்கடி காரணமாக வர்த்தக, கைத்தொழில் மற்றும் சமையலுக்கு தேவையான எரிவாயுவை இறக்குமதி செய்வதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிறுவனம், கடன் பத்திரத்தை திறப்பதற்கு பல மாதங்கள் சென்றதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு கோரிக்கைக்கு அமைவாக விநியோகத்தை மேற்கொள்வதிலும் சவால்கள் எதிர்நோக்கப்பட்டுள்ளதாக, நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அரச மற்றும் வர்த்தக வங்கிகளுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான கடன் பத்திரத்தை திறக்க முடிந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு, சிலிண்டர்களில் நிரப்ப்பட்டுள்ளதுடன் இவை தமது விற்பனை முகவர்கள் மூலம் உள்ளுர் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.