நூறு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கி மோசடிகளின் எண்ணிக்கை குறிப்பிடத் தக்க அளவில் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2020 – 2021 நிதியாண்டில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாயாக இருந்த வங்கி மோசடித் தொகை மதிப்பு கடந்த நிதியாண்டில் 41 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
தங்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் இணைந்து வணிக வங்கிகளில் முன்னெச்சரிக்கை அமைப்பு முறையை நிறுவிச் செயல்பட்டதே மோசடி குறைந்துள்ளதற்குக் காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.