வாலிபரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கிய சிறுவர்கள்.. மெரினாவில் பரபரப்பு சம்பவம்!

சென்னை மெரினா பகுதியில் வாலிபரிடம் வீண் தகராறு செய்து கத்தியால் தாக்கிய வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடியில் வசித்து வரும் இளமாறன் என்பவர் புகைப்பட கலைஞராக பணி செய்து வருகிறார். இவர் தனது நண்பரின் திருமண போட்டோஷுட் எடுப்பதற்காக, 6 நண்பர்களுடன் சேர்ந்து இன்று காலை சுமார் 6.30 மணியளவில் மெரினா, நம்ம சென்னை பின்புறம் மணற்பரப்பில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (எ) தோல் ஆனந்த் எந்த வித முன்விரோதமும் இல்லாதபோதும் வேண்டும் என்றே எந்த ஏரியா என கேட்டு வீண் தகராறு செய்துள்ளார்.
image
அப்போது இளமாறன் தரப்பினருக்கும் ஆனந்த் (எ) தோல் ஆனந்த் தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் அங்கு மணற் பரப்பிலிருந்த தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு வந்து, இளமாறனிடம் தகராறு செய்து கட்டை மற்றும் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இளமாறன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
image
D-5 மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஓரிரு நிமிடங்களில் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று, சம்பவ இடத்தில் பொதுமக்கள் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோவையும், சம்பவ இடத்தில், பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் வைத்து தீவிர விசாரணை செய்து ஆனந்த் (எ) தோல் ஆனந்த் மற்றும் அவருடன் வந்த 3 இளஞ்சிறார்களையும் 2 மணி நேரத்திற்குள் பிடித்து, தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.