வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் காவல்துறையினர், சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது லோகநாதன் என்பவர் மது பாட்டில்கள் மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் லோகநாதனை கைது செய்து, அவரிடமிருந்த 82 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அதே பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த ஜெயக்குமாரையும் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.