வெளிநாட்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது


திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு
பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்
இளைஞரொருவரை நேற்று(02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய பெண்கள் இருவர் கடற்கரையோரமாக
சென்றுள்ளனர்.

சம்பவம்

வெளிநாட்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது | Man Arrested For Sexually Abusing Foreign Women

இதன்போது உள்வீதியூடாக வந்த இளைஞர் இரு யுவதிகளையும் பாலியல்
துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சஹ்ரான் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விசாரணை

வெளிநாட்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது | Man Arrested For Sexually Abusing Foreign Women 

பாலியல் துஷ்பிரயோக தொடர்பில் பிரான்ஸ்
நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களும் சட்டவைத்திய நிபுணர் அறிக்கையை பெற்றுக்
கொள்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.