சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
மேற்கு சிட்னியில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்ததால் அங்கு கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மழை அதிகமாக பெய்யும் என்பதால் சுமார் பத்தாயிரம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு தரப்பில், “இது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலான அவசர நிலை. நாம் கடல் அரிப்பு, வெள்ளம் இவற்றை எதிர் கொண்டுள்ளோம்” என்றார்.
ஆஸ்திரேலியாவில் சில இடங்களில் 350 மிமீ மழை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர்.
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.