ஹாங்காங் : ஹாங்காங்கில் 30 பேர் பயணித்த கப்பல், புயலில் சிக்கியது. பெரிய அலையால் கவிழ்ந்தது. மூவர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது.
சீனாவில் சமீபத்தில் உருவான ‘சபா’ புயலால் கனமழை பெய்து வருகிறது. ஹாங்காங்கின் தென்மேற்கே 296 கி.மீ.,ல் தொழிற்சாலை கப்பல் பயணித்தது. அப்போது மணிக்கு 144 கி.மீ., வேகத்தில் வீசிய ‘சபா’ புயல் காற்றால் 10 அடிக்கு மேல் கடல் அலை எழும்பியது.இதில் சிக்கிய கப்பல் இரண்டாக உடைந்து நீரில் மூழ்கியது. தகவலறிந்த ஹாங்காங் நிர்வாகம் 2 விமானம், 4 ெஹலிகாப்டர், படகு மூலம் மீட்பு பணியை துவக்கியது. மூன்று பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது. மோசமான வானிலை மீட்பு பணிக்கு இடையூறாக இருப்பதாக மீட்புபடையினர் தெரிவித்தனர். இதற்கிடையே ‘சபா’ புயல் குவாங்டாக் மாகாணத்தின் ஜான்ஜியாங் நகரில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் : ஹாங்காங்கில் 30 பேர் பயணித்த கப்பல், புயலில் சிக்கியது. பெரிய அலையால் கவிழ்ந்தது. மூவர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது.சீனாவில் சமீபத்தில் உருவான ‘சபா’
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.