5-வது டெஸ்ட் 2-ஆம் நாள் ஆட்டம்: ஜடேஜா அதிரடி சதம்! இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்


இங்கிலாந்து அணியுடனான 5-வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட்டானது.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச, இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் எடுத்திருந்தது.

ஒரு கட்டத்தில் 98 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய இந்திய அணியை, ரிஷப் பண்ட – ஜடேஜா ஜோடி அபாரமாக விளையாடி சரிவிலிருந்து மீட்டது குறிப்பிடத்தக்கது. பன்ட் 146 ஓட்டங்கள் (111 பந்து, 19 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார்.

ஜடேஜா (83 ஓட்டங்கள்), ஷமி இருவரும் நேற்று 2-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஷமி 16 ஓட்டங்களும், ஜடேஜா சத்தத்தைக் கடந்து 104 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

5-வது டெஸ்ட் 2-ஆம் நாள் ஆட்டம்: ஜடேஜா அதிரடி சதம்! இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் | Jadeja Century India Dominance England5th Test

ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள் அடித்து இந்திய அணியின் கேப்டன் பும்ரா புதிய வரலாறு படைத்தார்.

பும்ரா – சிராஜ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 41 ஓட்டங்கள் சேர்க்க, இந்தியா 416 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட்டானது (84.5 ஓவர்).

கேப்டன் பும்ரா 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 5, பாட்ஸ் 2, பிராடு, ஸ்டோக்ஸ், ரூட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

5-வது டெஸ்ட் 2-ஆம் நாள் ஆட்டம்: ஜடேஜா அதிரடி சதம்! இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் | Jadeja Century India Dominance England5th Test

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, பும்ரா வேகத்தை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. மழை காரணமாக ஆட்டம் அவ்வப்போது தடைபட்ட நிலையில், இங்கிலாந்து 11 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதையும் படியுங்கள்: உலகிலேயே ரிஷப் பண்ட் மட்டும்தான்: புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்

5-வது டெஸ்ட் 2-ஆம் நாள் ஆட்டம்: ஜடேஜா அதிரடி சதம்! இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் | Jadeja Century India Dominance England5th Test

அலெக்ஸ் லீஸ் 6, ஸாக் கிராவ்லி 9, ஆலிவர் போப் 10 ஓட்டங்கள் எடுத்து பும்ரா வேகத்தில் வெளியேறினர். இந்த நிலையில், ஜோ ரூட் – ஜானி பேர்ஸ்டோ இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். ஆனால், சிராஜ் பந்தில் ரிஷபீடம் கேட்ச் கொடுத்து 31 ஓட்டங்களுடன் ரூட் வெளியேறினார்.

இறுதியில், தற்போது 12 ஓட்டங்களுடன் ஜானி பேர்ஸ்டோ மற்றும் பெண் ஸ்டோக்ஸ் (0) காலத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 27 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழந்து 84 ஓட்டங்களை எடுத்திருந்தது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.