சென்னை: M.E, M.Tech படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது. M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேர www.annauniv.edu/tanca2022 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TANCET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.