ஆப்பிரிக்காவை சேர்ந்த ராட்சத நத்தைகளின் படையெடுப்பால் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் பாஸ்கோ மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 2500 முட்டைகள் வரை இடும் இந்த ராட்சத நத்தைகள் மூலம் மூளைக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் இருப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நத்தைகளை கண்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறும், அதனை வெறும் கையால் தொட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராட்சத நத்தைகளை வளர்ப்பது அமெரிக்காவில் சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.