புதுடில்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு தொடர்ந்த வழக்கு வரும் ஜூலை 6ல் விசாரணைக்கு வருகிறது.
சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதிமுக பொதுக்குழு கூடியவுடன், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 23 தீர்மானங்களை தவிர பிற தீர்மானங்களை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்து மனு அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி அனுமதி பெற்று நாளை மறுநாள் (ஜூலை 06) அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
புதுடில்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு தொடர்ந்த வழக்கு வரும் ஜூலை 6ல் விசாரணைக்கு வருகிறது.சென்னையில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.