மைசூரு: சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக அவதூறு பதிவுகளை போட்டு, என்னுடைய மன அமைதியை சிலர் கெடுக்கின்றனர் என்று கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். மூத்த கன்னட நடிகரும், மறைந்த மைசூர் லோகேஷின் மகளுமான பவித்ரா லோகேஷ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர நடிகையாக சின்னத்திரையிலும், பெரிய திரைகளிலும் நடித்துள்ள இவரது கணவர் சுசேந்திர பிரசாத் மற்றும் சகோதரர் ஆதி லோகேஷ் ஆகியோரும் நடிகர்களாக உள்ளனர். இந்நிலையில் நடிகை பவித்ரா லோகேஷ், கர்நாடக மாநில சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில், ‘எனது பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, அந்த கணக்குகள் மூலம் அவதூறான பதிவுகளை சிலர் பதிவேற்றி வருகின்றனர். இந்த அப்டேட்கள் மூலம் என்னைப் பற்றிய வதந்திகளையும், தவறான செய்திகளையும் பரப்பி வருகின்றனர். என்னை சிலர் பின்தொடர்ந்து வருகின்றனர். சமீபத்தில் மைசூரில் உள்ள வி.வி பகுதியில் மர்ம நபர்கள் சிலர் என்னை வழிமறித்து தொந்தரவு கொடுத்தனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை. இவர்களால் எனது மன அமைதி கெடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.