How to make tasty Jalebi in home recipe in Tamil: ஜிலேபி. பெயரைக் கேட்டாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கி விடும். அதுவும் கண்ணைக் கவரும் செந்நிறத்தில், பாகு ஊற இருக்கும் ஜிலேபியை பார்த்தாலே சாப்பிடத் தோன்றும். இப்படியான ஜிலேபியைஒ பெரும்பாலும் நாம் கடைகளில் வாங்கி தான் சாப்பிட்டு வருகிறோம்.
ஆனால், நாம் வீட்டிலேயே எளிமையாக, அதேநேரம் சுவையான ஜிலேபி செய்யலாம். அதுவும் புளித்த இட்லி மாவு போதும். வீட்டிலுள்ள சிலப் பொருட்களைக் கொண்டே, இந்த அருமையான ஜிலேபியை செய்யலாம். இட்லி மாவில் சுவையான ஜிலேபி செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
இதையும் படியுங்கள்: வளரும் குழந்தைகளுக்கு புரோட்டீன் சப்பாத்தி.. எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
புளித்த இட்லி மாவு – ஒரு கப்
கேசரி பவுடர் – 1/2 ஸ்பூன்
மைதா மாவு – 1 1/4 கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
பாகு தயாரிக்க:
சர்க்கரை – 2 கப்
தண்ணீர் – 1 கப்
எலுமிச்சை – ½
செய்முறை:
1-3 நாள் ஆட்டி வைத்து நன்கு புளித்த அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கேசரி பவுடரை நிறத்திற்காக சேர்த்துக்கொள்ளவும்.
பின் அதில் மைதாமாவு சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கரைத்துக்கொள்ளவும்.
இதற்கிடையே பாகு தயாரிக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேறியவுடன், அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வையுங்கள். அதில் எலுமிச்சை சாறு பிழிந்துகொள்ளுங்கள்.
தற்போது கரைத்து வைத்துள்ள மாவை பிளாஸ்டிக் கவரை கூம்பு வடிவில் செய்து நுனியில் துளையிட்டு அதில் மாவை ஊற்றிக் கொள்ளுங்கள். இது ஜிலேபி முறுக்குவதற்கு உதவும்.
தற்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடேறியதும், அதில் எண்ணெய் விட்டு காயவைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது எண்ணெய்யில், மாவை இரண்டு சுத்து முறுக்கு போல் சுற்றி எடுங்கள். பின் பொன்னிறமாக வந்ததும் அப்படியே எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டுவிடுங்கள்.
5 நிமிடங்கள் ஊறினால் போதும். நீண்ட நேரம் ஊற விட்டால் மொறுமொறுப்பு போய்விடும். அவ்வளவுதான் சுவையான ஜிலேபி ரெடி!
நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்!