இத்தாலியின் ஆல்ப்ஸ் பனிமலை தொடரில் உள்ள மார்மலோடா சிகரத்தில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதில், 6 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாலியில் கடும் கோடை வெப்பம் நிலவிவருவதால், இந்த பனி சிகரம் திடீரென உருகி இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த எதிர்பாராத இயற்கை பேரழிவில் மலையேறும் குழுவை சேர்ந்தவர்கள் சிக்கினார்கள். இதுவரை 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆபத்தான நிலையில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் மீட்புப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.