இந்திய அணியுடனான 5-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 378 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், 5-வது டெஸ்ட் போட்டி தற்போது பர்மிங்காமில் தற்போது நடந்து வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட 146 ஓட்டங்களும், ஜடேஜா 104 ஓட்டங்களும் எடுக்க, இந்தியா முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணியிடம் தொடரை இழந்த இலங்கை! 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. ஜானி பேர்ஸ்டோ 106 ஓட்டங்கள் விளாசினார்.
இதைத் தொடர்ந்து, 136 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-ஆம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கில் 4, ஹனுமா 11, கோஹ்லி 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
புஜாரா 50 ஓட்டங்களுடனும், பன்ட் 30 ஓட்டங்களுடன் திங்கட்கிழமை 4-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். புஜாரா 66 ஓட்டங்கள் (168 பந்து, 8 பவுண்டரி) விளாசி பிராடு பந்துவீச்சில் லீஸ் வசம் பிடிபட்டார்.
பேர்ஸ்டோவை பிளையிங் கிஸ் குடுத்து அனுப்பிவைத்த விராட் கோலி! இங்கிலாந்து ரசிகர்கள் கோபம்
ஷ்ரேயாஸ் 19 ஓட்டங்களில் வெளியேற, பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த பன்ட் 57 ஓட்டங்கள் எடுத்து (86 பந்து, 8 பவுண்டரி) ஜாக் லீச் சுழலில் ரூட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஷர்துல் 4, ஷமி 13 ஓட்டங்களில் பெவிலியன் திரும்ப, ஜடேஜா 23 ஓட்டங்கள் எடுத்து (58 பந்து, 1 பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். பும்ரா 7 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாக, இந்தியா 2-வது இன்னிங்சில் 245 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது (81.5 ஓவர்).
இலங்கை சுழற்பந்து வீச்சாளருக்கு கோவிட்-19 தொற்று., 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல்
இங்கிலாந்து பந்துவீசிச்சில் கேப்டன் ஸ்டோக்ஸ் 4, பிராடு, பாட்ஸ் தலா 2, ஆண்டர்சன், லீச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 378 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.
நான்காவது இன்னிங்சில் இம்மைதானத்தில் சராசரியாக 152 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. ஆனால், அலெக்ஸ் லீஸ், கிராலே ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. 44வது பந்தில் லீஸ் அரைசதம் கடந்தார்.
இந்த ஜோடி, முதல் 120 பந்தில் 100 ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினர். 21-வது ஓவரில் பந்து தனது வட்டவடிவ தன்மையை இழக்க, புதிய பந்து மாற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வந்த பும்ரா, நான்காவது பந்தை 140 கி.மீ., வேகத்தில் வீசினார். இது கிராலேவை (46) போல்டாக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
அடுத்து வந்த போப்பை 3-வது பந்தில் வெளியேற்றினார் பும்ரா. மறுபக்கம் 56 ஓட்டங்கள் எடுத்து இந்தியாவுக்கு தொல்லை தந்த லீஸ், ரன் அவுட்டானார். ஜோ ரூட், பேர்ஸ்டோவ் இணைந்தனர். சிராஜ் பந்தில், 14 ஓட்டங்களில் பேர்ஸ்டோவ் கொடுத்த ‘கேட்ச்சை’ விஹாரி கோட்டை விட இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இருவரும் அரைசதம் விளாசினர். கடைசி வரை இவர்களை பிரிக்கவே முடியவில்லை. நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 259 ஓட்டங்கள் எடுத்து, 119 ஓட்டங்கள் மட்டும் பின்தங்கி இருந்தது. பேர்ஸ்டோவ் (72), ஜோ ரூட் (76) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில், ஐந்தாவது டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளில் (செவ்வாய்க்கிழமை) இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி வெற்றி பெறலாம்.