இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ ஜி42 | விலை, சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்தியச் சந்தையில் மோட்டோ ஜி42 ஸ்மார்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11, ரியல்மி 9i, சாம்சங் கேலக்ஸி எம்13 போன்ற பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்கு விற்பனையில் கடுமையான சவாலை இந்த போன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைய காலமாக வரிசையாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் ஜி சீரிஸ் வரிசையில் ஜி42 என்ற ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் பிளிப்கார்ட் மற்றும் ரீடெயில் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்து.

வரும் 11-ஆம் தேதி முதல் இந்த போன் சந்தையில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தூசு மற்றும் நீர் தெளிப்பை தாங்கும் வகையிலான IP52 ரேட்டிங்கை கொண்டுள்ளது இந்த போன்.

சிறப்பு அம்சங்கள்

  • 6.4 இன்ச் கொண்ட AMOLED ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே இதில் இடம்பெற்றுள்ளது.
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகாபிக்சல் திறன் கொண்ட செல்ஃபி கேமரா இதில் இடம்பெற்றுள்ளது.
  • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 புராசஸரை கொண்டுள்ளது இந்த போன்.
  • இந்த போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் இதில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது மோட்டோ.
  • 20 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 5000mAh திறன் கொண்ட பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது. 4ஜி இணைப்பு வசதியை கொண்டுள்ளது.
  • 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை ரூ.13,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.