கொழும்பில் ‘பார்க் அண்ட் ரைட் சிஸ்டத்தின்’ கீழ் சேவையில் ஈடுபடுத்த இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்குள் தனியார் வாகனங்கள் பிரவேசிப்பதை குறைப்பதற்காக மாகும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த ஆகிய இடங்களில் மூன்று இடங்கள் காவலரண் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து 100 பஸ்கள் வாடகைக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கு அமைச்சரவையின் அனுமதியினை பெற முயற்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.