குலு: இமாச்சல பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்திலிருந்து சைன்ஜ் பகுதிக்கு பள்ளி மாணவர்கள் உள்பட பொது மக்களை 40 பேருடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இன்று (ஜூலை 04) காலை 8 மணி அளவில் நியோலி-ஷான்சர் சாலையில் சென்றபோது ஜங்லா பகுதியில் இருந்த பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
குலு: இமாச்சல பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்திலிருந்து சைன்ஜ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.