அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் 6ஆம் தேதி பட்டியலிடப்பட உள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதின்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு அறிவித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM