எம்பிலிபிட்டிய, 99 ஆவது மைல் கல் பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திy; ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த முயன்ற இராணுவ வீரர் ஒருவர் நேற்று (03) மாலை கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 5 நாட்களுக்குப் பின்னர் நேற்று எரிபொருள் கிடைத்துள்ளது, சில மணித்தியாலங்களில் அவை தீர்ந்துள்ளன. அதனைத் தொடர்ந்து அங்கு வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அமைதி இன்மையை ஏற்படுத்திaதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் நிலைமையைக் கட்டுப்படுத்த முற்பட்ட போது, ஒருவர் இராணுவ வீரரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளர்.
மேலும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரின் துப்பாக்கியையும் குறித்த நபர் பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கதுருகஸ்ஆர பொறியியலாளர் படை முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.