ஒரு துடைப்பம் 475 ரூபாய் மட்டுமே.. அட நம்புங்க சாமி.. உண்மை தான்..!

அக்கரைக்கு இக்கரை பச்சை என்பார்கள். நாம் இருக்கும் இடம் சரியில்லை, தங்களுக்கு எதிராக உள்ள வெளி நாடுகள் தான் சொர்க்கம் என பலரும் நினைப்பதுண்டு. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்த எண்ணம் அதிகம் உண்டு. இதனாலேயே படித்து முடித்தோமா? அமெரிக்கா, லண்டன் என வேலைக்கு சென்றோமா? என இருக்கிறார்கள்.

ஆனால் அங்கு போன பிறகு தான் அங்குள்ள பிரச்சனைகள் முழுமையாக தெரியவரும்.

இது குறித்து இணையத்தில் உலாவி வரும் கருத்தினை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

விலை ரொம்ப அதிகம்

பொதுவாக வெளி நாடு சென்று வந்தவர்கள் கதை கதையாக சொல்வதை கேட்டிருப்போம். விலைவாசி ரொம்ப அதிகம். குறிப்பாக இந்திய பொருட்களின் விலை அங்கு மிக அதிகம் என கேள்விப் பட்டிருப்போம். வெளி நாடுகளில் இந்திய பொருட்கள் கடைகள் கிடைக்கிறது என்றாலும், அதன் விலை மிக அதிகம். ஆக நீங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.

 திகைக்க வைக்கும் வீடியோ

திகைக்க வைக்கும் வீடியோ

அப்படி அமெரிக்காவில் ஒரு துடைப்பத்தின் விலை மற்றும் சில அடிப்படை பொருட்களின் விலை குறித்தான ஒரு வீடியோ பரவி வருகின்றது. இந்த விலைவாசியானது பார்ப்போரை திகைக்க வைக்கும் விதமாக உள்ளது.

அமெரிக்காவின் உட்டாவில் வசிக்கும் டிஜிட்டல் கன்டெண்டினை உருவாக்கும் குஞ்சன் சைனி, கூஃப்வுமன் என்ற பெயரில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இந்திய பொருட்கள் விற்பனை செய்யப்படும் மளிகை கடைக்கு செல்கிறார்.

இந்திய பொருட்களுக்கான அமெரிக்க விலை
 

இந்திய பொருட்களுக்கான அமெரிக்க விலை

அந்த கடையில் எவ்வளவு செலவு செய்தோம் என்பதை மற்றொரு வீடியோவாக பதிவிட்டுள்ளார். குறிப்பாக இந்தியாவில் மிக விலை குறைந்த பொருளாக இருக்கும் பொருட்களை அந்த வீடியோவில் காட்டுகின்றார். அந்த வீடியோவில் இந்திய பொருட்களுக்கான அமெரிக்க விலை என பதிவிட்டுள்ளார்.

விலைவாசி என்ன?

விலைவாசி என்ன?

ஒரு துடைப்பத்தினை காட்டி இது அவசியம். அமெரிக்கர்கள் இதை செய்வதில்லை. அதன் விலை 5.99 டாலர்கள் (இந்திய மதிப்பு சுமார் 475 ரூபாய்) என்றும் காட்டப்பட்டுள்ளது. இதே இரண்டு பன்னீர் பாக்கெட்டுகளின் விலையானது 4.99 டாலர்களாகும். இதே ஒரு சிறிய கறிவேப்பிலை 1 டாலராகவும், கரம் மசாலா 4.99 டாலராகவும், சாம்பார் மசாலா – 1.99 டாலர் எனவும். இன்ஸ்டன்ட் தோக்லா 3.99 டாலராகவும், பானி பூரி 7.99 டாலராகவும், டீயின் விலை 5.99 டாலராகவுன் உள்ளது. இதே பக்கர் கானியின் விலை 3.99 டாலராகவும் உள்ளது.

மொத்த செலவு

மொத்த செலவு

மேற்கண்ட மொத்த பொருட்களின் விலை மட்டும் 86 டாலர்கள் ஆனது. இதன் இந்திய மதிப்பு சுமார் 7,000 ரூபாயாகும். இது பலரின் மத்தியிலும் அதிர்ச்சியான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இது ஏற்றுக் கொள்ள சற்று கடினமானதாக இருந்தாலும், வேறு வழியில்லை (இது NEWS18 அடிப்படையாக கொண்டு எழுத்தப்பட்டது) எனலாம். இதற்கிடையில் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை மாறி மாறி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்,

நம்மூரை போல வருமா?

நம்மூரை போல வருமா?

எனினும் அமெரிக்காவில் நம் மக்கள் சம்பாதிப்பது டாலர் என்பதும் மறுக்க முடியா உண்மையே. ஆக அது ரூபாயுடன் விலையை ஒப்பிடுவது நியாயமே இல்லை என்று பலரும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

இதனை படிக்கும் போது சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. உண்மையில் எந்த நாட்டிற்கு சென்றாலும், நம் நாட்டினை, நம்மூரினை போல வரவே வராது என்பது தான் உண்மை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Do you know how much Indian products cost in USA?

Do you know how much Indian products cost in USA?/ஒரு துடைப்பம் 475 ரூபாய் மட்டுமே.. அட நம்புங்க சாமி.. உண்மை தான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.