காஃபி ஆர்டர் எடுக்கும் டிவிட்டர் சிஇஓ.. பராக் அகர்வால் செயலால் ஊழியர்கள் ஷாக்..!

டிவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிய கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் டிவிட்டர் வாங்குவது குறித்து இறுதி முடிவுகள் என்னும் எடுக்கப்படாத நிலையிலும், சிஇஓ பராக் அகர்வால் தலைமையிலான டிவிட்டர் நிர்வாகம் தனது பணிகளை விரைவாகவும், பல மாற்றங்கள் உடனும் செய்து வருகிறது.

ஆனால் இன்னும் எலான் மஸ்க் கேட்கும் போலி கணக்குகள், பாட் கணக்குகள் பற்றிய எண்ணிக்கை மற்றும் தரவுகளை அளிக்காமல் டிவிட்டர் இழுத்து அடிக்கிறது.

இதனாலேயே எலான் மஸ்க்-இன் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம் இன்று வரையில் இழுத்து அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் எலான் மஸ்க் தரவுகள் பரிமாற்றம் குறித்த தாமதம் குறித்து டிவிட்டருக்கு நோட்டீஸ்-ம் அனுப்பியுள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தின் தற்காலிக சி.ஈ.ஓ ஆகிறார் எலன் மஸ்க்?

பராக் அகர்வால்

பராக் அகர்வால்

டிவிட்டர் நிறுவனத்தின் வர்த்தகம், மேம்பாட்டுப் பணிகள், மாற்றங்கள் குறித்தும் டெக் மற்றும் சமுக வலைத்தள வல்லுனர்களைச் சந்திக்கும் விதமாகப் பராக் அகர்வால் கடந்த ஒருவாரமாகப் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பல மீட்டிங் நடத்தினார், இதில் டெக் வல்லுனர்கள், ஆர்வலர்கல் மத்தியிலான பல பொதுக் கூட்டங்களும் அடக்கம்.

காஃபி ஆர்டர்

காஃபி ஆர்டர்

இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், ஊழியர்களுக்கும், தனக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்கும் விதமாக டிவிட்டர் லண்டன் அலுவலகத்தில் ஊழியர்களுக்கான காஃபி ஆர்டரை சிஇஓ-வான பராக் அகர்வால் எடுத்தார். இது மட்டும் அல்லாமல் சிஎப்ஓ அனைத்து ஊழியர்களுக்கும் பிஸ்கெட் கொடுக்கும் பணியைச் செய்தனர்.

 டிவிட்டர் ஊழியர்கள்
 

டிவிட்டர் ஊழியர்கள்

இந்த நிகழ்வின் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதேபோல் முக்கிய ஊழியர்கள், டெக் அணிகள் உடன் லன்ச், டின்னர், காஃபி என ஊழியர்கள் உடன் இணைந்தது லண்டன் டிவிட்டர் அலுவலக ஊழியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

மேலும் பராக் அகர்வால் உடனான சந்திப்பை பல ஊழியர்கள் அவரை டேக் செய்து டிவீட் செய்த நிலையில், பராக்-ம் ரீ – டிவீட் செய்துள்ளார். டிவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றினால் பராக் அகர்வால்-ன் பதவி கேள்வி குறித்தான் என்று பலரும் கூறுகையில் தொடர்ந்து தனது பணிகளைச் செய்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Twitter CEO Parag Agrawal takes coffee orders from london employees, Photos were trending

Twitter CEO Parag Agrawal takes coffee orders from london employees, Photos were trending காஃபி ஆர்டர் எடுக்கும் டிவிட்டர் சிஇஓ.. பராக் அகர்வால் செயலால் ஊழியர்கள் ஷாக்..!

Story first published: Monday, July 4, 2022, 12:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.