காளி : சர்ச்சையை ஏற்படுத்திய லீனா மணிமேகலை, கொந்தளிக்கும் இந்துக்கள்

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை கோபப்படுத்தி வருகிறது. 'செங்கடல், மாடத்தி' ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை தற்போது 'காளி' என்ற டாகுமென்டரி படம் ஒன்றின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார். இப்படத்தை இயக்கி, காளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் லீனா மணிமேகலை.

அதில் 'காளி' தோற்றத்தில் ஒரு பெண் புகை பிடிப்பது போன்ற போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டுவிட்டர் தளத்தில் 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து, லீனா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

இது குறித்து லீனா மணி மேகலை, “ஒரு மாலைப் பொழுது, டோரோண்டோ மாநகரத்தில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும் போது நடக்கிற சம்பவங்கள்தான் படம். படத்தைப் பார்த்தா “arrest leena manimekalai'' ஹேஷ்டேக் போடாம “love you leena manikemalai''டேஷ்டேக் போடுவாங்க,” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.