‘காளி’ படத்தின் போஸ்டர் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் கோபத்தைத் தூண்டிய நிலையில், பலர் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம்சாட்டி, இயக்குனர் லீனா மணிமேகலையைக் கைது செய்யக் கோரியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று ட்வீட் செய்யப்பட்ட இந்த போஸ்டரில், இந்து தெய்வமான காளி போல் உடையணிந்த பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பதையும், எல்.ஜி.பி.டி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வானவில் கொடியை கையில் வைத்திருப்பதையும் காட்டுகிறது.
சுயாதீன திரைப்படத் தயாரிப்பாளரான லீனா மணிமேகலை தனது சமீபத்திய ஆவணப்படமான காளி பட போஸ்டரை ட்வீட் செய்த சில நாட்களுக்குப் பிறகு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த சனிக்கிழமையன்று ட்வீட் செய்யப்பட்ட இந்த போஸ்டரில், இந்து பெண் தெய்வமான காளி போல் உடையணிந்த பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பதையும், எல்.ஜி.பி.டி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியை கையில் வைத்திருப்பதையும் காட்டுகிறது.
‘காளி’ பட போஸ்டர் ஆன்லைனில் கோபத்தைத் தூண்டிய நிலையில், பலர் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டியதோடு இயக்குனர் லீனா மணிமேகலையைக் உடனே கைது செய்யக் கோரினர். இதையடுத்து, ட்விட்டரில் #Arrestleenamanimekalai என்று ட்ரெண்டிங் செய்யத் தொடங்கினர்.
சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்வினையைத் தொடர்ந்து, கனடாவைச் சேர்ந்த மணிமேகலை ட்விட்டர் பயனர்களை #லீனா மணிமேகலையை கைது செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக்கிற்கு பதிலாக #லவ் யூ லீனா மணிமேகலை என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். “ஒரு மாலைப் பொழுதில் காளி தோன்றி டொரொண்டோ தெருக்களில் உலா வரும்போது நடக்கும் சம்பவங்களைச் சுற்றியே இந்த படம் நகர்கிறது. படத்தைப் பார்த்தால், ‘லீனா மணிமேகலையை கைது செய்யுங்கள்’ என்ற ஹேஷ்டேக்கைப் போடாமல் ‘லவ் யூ லீனா மணிமேகலை’ என்ற ஹேஷ்டேக்கைப் போடுவார்கள்” என்று ட்வீட் செய்தார்.
மற்றொரு ட்வீட்டில் “எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
காளி முதன்முதலில் கடந்த வார இறுதியில் டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தை கொண்டாடும் ஒரு வார கால திருவிழாவான ரிதம்ஸ் ஆஃப் கனடாவில் திரையிடப்பட்டது. “எனது சமீபத்திய திரைப்படத்தின் வெளியீட்டு விழாவைப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் – இன்று ஆகா கான் அருங்காட்சியகத்தில் ரிதம்ஸ் ஆஃப் கனடா” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த லீனா மணிமேகலை, மாடத்தி, செங்கடல், சாக்கடல் ஆகிய படங்களை இயக்கி சர்வதேச அளவில் பாரட்டைப் பெற்றவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“