குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு – மேலும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; இதுவரை தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

காந்திநகர்: கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை தண்டிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த கரசேவகர்கள் கடந்த 2002-ம் ஆண்டு உ.பி.யில் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு யாத்திரை சென்றனர். அவர்கள் பிப்ரவரி 27-ம் தேதி ரயில் மூலம் குஜராத் வந்து கொண்டிருந்தனர். அப்போது கோத்ரா என்ற இடத்தில் ஒரு கும்பல் ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் 59 கரசேவகர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மதக் கலவரம் மூண்டது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மையினர் ஆவர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதில் ரயில் எரிப்பு சம் பவம் தொடர்பாக கோத்ரா கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ரபிக் பாதுக் மீது குற்றம் சாட்டப்பட்டது. தலைமறைவாக இருந்த இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப் பட்டார். இதையடுத்து, அவர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலை யில் நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியானது.

இதில் ரபிக் பாதுக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ரயில் எரிப்பு வழக்கில் இதுவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் 35-வது நபர் பாதுக் என அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகர் தெரிவித்தார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் பாதுக் பெயர் இடம்பெற்றது. இதையடுத்து, அங்கிருந்து தப்பிய அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா திரும்பிய அவரை போலீஸார் கைது செய்தனர். அதன் பின் அவர் மீதான வழக்கு விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கில் ஏற்கெனவே 31 பேர் குற்றவாளிகள் என கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவர்களில் 11 பேருக்கு மரண தண் டனையும் 20 பேருக்கு ஆயுள் தண் டனையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், 11 பேரின் மரண தண் டனையை ஆயுளாக குறைத் தது. அதேநேரம் 20 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. -பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.