குறைவாக இயங்கும் பேருந்துகள்! பயணிகள் பெரும் பாதிப்பு(Video)


ஹட்டனில் பேருந்துகள் குறைவாக இயங்குவதால், அலுவலக ஊழியர்கள் உட்பட பயணிகள் மிகுந்த
சிரமத்துக்குள்ளாகின்றனர்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது போக்குவரத்து சேவை
முடக்கப்பட்டுள்ளது.

அந்த சூழ்நிலையில் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு
உள்ளாகியிருக்கின்றனர்.

ஆபத்தான பயணம் 

குறைவாக இயங்கும் பேருந்துகள்! பயணிகள் பெரும் பாதிப்பு(Video) | Many People Including Passengers Are Affected

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஹட்டனிலும் பேருந்துகள்  குறைவாகவே செயற்பட்டு
வருகின்றது.

இதனால் ஹட்டன் நகரில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் மற்றும் தனிப்பட்ட
தேவைகளுக்காக பயணிக்கும் பயணிகள் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதை
காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், சேவையில் ஈடுப்பட்டுள்ள பஸ்களில் மருத்துவமனைகளுக்குள் வரும்
நோயாளிகளும், பல்வேறு தேவைகளுக்காக பயணிக்கும் பயணிகளும், பாடசாலை மாணவர்களும்
மிகுந்த சிரமத்துடன், ஆபத்தான நிலையில் குறித்த பேருந்துகளில்  ஏறிச் செல்வதைக்
காணமுடிகிறது. 

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.