வேலை கிடைப்பது என்பது மிகவும் அரிதான இந்த காலத்தில் வேலை தேடுவோரின் ரெஸ்யூம் என்பது வேலை கிடைக்க மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமீபத்தில் 48 ஆண்டுகளுக்கு முந்தைய பில்கேட்ஸ் அவர்களின் ரெஸ்யூம் இணையதளங்களில் வைரலானது என்பதை பார்ப்போம்.
இந்த நிலையில் வேலை தேடும் இளைஞர் ஒருவர் வித்தியாசமாக கேக் பெட்டியில் ரெஸ்யூம் வைத்து ஜொமைட்டோ நிறுவனத்தின் டீசர்ட் அணிந்து வித்தியாசமான முறையில் டெலிவரி செய்துள்ளார்.
தமிழக அரசின் கிரீன் ஹைட்ரஜன், கீரின் அம்மோனியா திட்டம்.. தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
கேக் பெட்டியில் ரெஸ்யூம்
பெங்களூரை சேர்ந்த ட்விட்டர் பயனாளியான அமன் கண்டேல்வால் என்பவர் ஜொமைட்டோ டெலிவரி நிறுவனத்தின் ஊழியர் போல் உடையணிந்து பெங்களூரில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலாளிகளின் கவனத்தை தன் பக்கம் திருப்ப கேக் பெட்டியில் தனது ரெஸ்யூமை வைத்து வழங்கியுள்ளார்.
ஜொமைட்டோ டீசர்ட்
உணவு பெட்டியில் ரெஸ்யூமை வைத்திருப்பது மற்றும் ஜொமைட்டோ டீசர்ட் அணிந்து இருக்கும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நிறுவனங்களிடம் கொடுக்கும் பெரும்பாலான ரெஸ்யூம்கள் குப்பையில் தான் முடிகிறது என்றும் ஆனால் என்னுடைய ரெஸ்யூம் உங்களுடைய வயிற்றில் எழுதப்பட்டு இருக்கிறது என்றும் அவர் அந்த ரெஸ்யூம் வைக்கப்பட்டுள்ள கேக் பெட்டியில் எழுதி உள்ளார்.
பலனளிக்குமா?
ஜமைக்கா டெலிவரி பையன் போல உடையணிந்து கேட் பேட்டியில் எனது ரெஸ்யூமை வைத்து பெங்களூரில் உள்ள சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு டெலிவரி செய்தேன். இது எனக்கு பலனளிக்குமா என்று கேப்ஷனாக அவர் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியுள்ளார்.
டுவிட்டர் பயனாளிகளின் கருத்து
இந்த நிலையில் அமன் கண்டேல்வால் மேலாண்மை பயிற்சியாளர் வேலை தேடுகிறார் என்றும் ஆனால் அவர் ஜொமைட்டோ டெலிவரி எக்ஸிக்யூட்டிவ் போல் ஆடை அணிந்து ரெஷ்யூம் அளித்தது ஏன்? என புரியவில்லை என ட்விட்டர் பயனாளில் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது என்றும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பைத்தியக்காரத்தனம்
இன்னொரு பயனாளி இது எனக்கு மட்டும் தான் பைத்தியக்காரத்தனமாக தெரிகிறதா? ஜொமைட்டோ ஊழியர் போல் மாறுவது அவ்வளவு எளிதா? ?ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பாதுகாப்பை கற்பனை செய்து பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பாதுகாப்பு ஒருபுறம் இருக்கட்டும், அந்த பாதுகாப்பின்மையை தவறாக பயன்படுத்துவதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக ஆகிவிடக் கூடாது என்றும் மற்றொரு ட்விட்டர் பயனாளி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜொமைட்டோ பதில்
இந்த சம்பவம் குறித்து ஜொமைட்டோ நிர்வாகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும் விரைவில் இது குறித்து தனது கருத்தை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட ஐடியாவா?
ஆனால் அதே நேரத்தில் இது அவருடைய தனிப்பட்ட ஐடியா இல்லை என்றும் இதேபோல் ஏற்கனவே அமெரிக்காவில் ஒரு நிறுவனத்திற்கு வேலை கேட்டு சென்ற நபர் ஒருவர் புகழ் பெற்ற நிறுவனத்தின் உடை அணிந்து தனது ரெஸ்யூமை தந்துள்ளார் என்றும் இன்னொரு பயனாளி சுட்டிக்காட்டியுள்ளார்.
வாழ்த்து
மொத்தத்தில் ஜொமைட்டோ நிறுவனத்தின் உடை அணிந்து கேக் பெட்டியில் ரெஸ்யூம் அளித்த பெங்களூரு இளைஞர் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு பேசுபொருள் ஆகிவிட்டதால் அவருக்கு நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்றே பல ட்விட்டர் பயனாளிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Man Dresses as a Zomato Delivery Executive and deliver Resume in a cake box
Man Dresses as a Zomato Delivery Executive and deliver Resume in a cake box |கேக் டப்பாவில் ரெஸ்யூம்.. பெங்களூரில் நடந்த கல கல மேட்டர்..!