கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
சோமன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பிரகாஷ், ஹேமலதா அமர்வு விசாரித்தது. குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக் கூடாது என விதிகள் எதுவும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
ஏசுதாஸ் பாடிய பாடல்கள் இந்துக் கோவில்களில் ஒலிக்கப்படுவதையும், வேளாங்கண்ணி தேவாலயத்திலும் நாகூர் தர்க்காவிலும் ஏராளமான இந்துக்கள் வழிபட்டுச் செல்வதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.