சிக்னல் ஜாமர்கள், ஜிபிஎஸ் தடுப்பான் போன்ற கருவிகளை தனிநபர்களோ, தனியார் நிறுவனங்களோ பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், வழிகாட்டுதல்களை மீறி அந்த சாதனங்களை தனியார் நிறுவனங்கள் விற்பது, விநியோகிப்பது, இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.