சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு – தொழில் பாதுகாப்பு ஆய்வு செய்ய 11 பேர் குழு! மத்திய அரசு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய  11 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

விருதுநகர் மாவட்டமான சிவகாசி பட்டாசு தயாரிப்புக்கு பேர் போனது. இங்குள்ள பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது வெடிவிபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. இதனால், வெடிதயாரிக்கும் தேவையான பாதுகாப்யை உறதி செய்யும் வகையில்,. உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாகவே வழக்கை முன்னெடுத்து விசாரித்தது. அதைத்தொடர்ந்து சிவகாசி பட்டாசு ஆலை விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பு விதிகளில் எதனை கடுமையாக்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, சிவகாசி பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய 11 பேர் கொண்ட  குழுவை மத்திய தொழில், வர்த்தக அமைச்சகம் நியமித்துள்ளது.

இக்குழுவில் நாக்பூர் எரிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி குமார், நாக்பூர் நேஷனல் பயர் சர்வீஸ் கல்லுாரி இயக்குனர் சவுத்ரி, தொழில்நுட்ப ஆலோசகர் நாராயணன், பொறியாளர் உமேத் சிங், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் தியாசங்கர் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கதலைவர் கணேசன், பட்டாசு வியாபாரிகள் சங்க பிரதிநிதி மணிக்ரோ, தனியார் நிறுவன செயல்அலுவலர் ஷா, பயர் சேஃப்டி அசோசியேஷன் அஜித் ராகவன், மும்பை தேசிய பாதுகாப்புகவுன்சில் லலித்கோப் ஹனா, தமிழக அரசு வருவாய் துறை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர்,  பட்டாசு தொழிலில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பட்டாசு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பட்டாசு தொழிலை மேம்படுத்துவது குறித்து அறிக்கையை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.