சுமார் 15 பவுசர்கள் எரிபொருளை சேமித்து வைத்து சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
953 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளிலேயே இந்த எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 884 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் 15 பவுசர்களுக்கு சமமானதாகும்.
அந்த எரிபொருட்களில் 27,001 லீட்டர் பெட்ரோல், 56,323 லீட்டர் டீசல் மற்றும் 19,195 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன அடங்கும்.