தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு முதலீடு மாநாடு என்ற பெயரில் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது. இதனுடைய முதலமைச்சரின் மு க ஸ்டாலின் துபாய், அபிதாபி ஆகிய நாடுகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இன்று காலை 10 மணிக்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 60 புத்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தங்களால் ரூ. 7000 கோடிக்கு மேல் முதலீடு கிடைக்கும் என்றும், இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதாகவும் தொழில் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இது தவிர பணிகள் நிறைவு பெற்றுள்ள12 திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.