டந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக்கடைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளி கடைபிடிப்பதையும் அந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.