சேட்டைத்தனத்தின் உச்சம்.. ஸ்விக்கி ஊழியர் செய்த காரியத்தை பாத்தீங்களா..!

மும்பையில் கனத்த மழைக்கு மத்தியில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர், குதிரையை பயன்படுத்தி உணவு டெலிவரியினை செய்துள்ளார்.

இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தியில் வைரலாக பரவி வருகின்றது.

கடந்த சில தினகளாகவே மும்பையில் கனத்த மழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் வழக்கம் போல பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது.

‘மிஸ் யூ’, ‘நைஸ் யுவர் பியூட்டி’.. ஸ்விக்கி டெலிவரி ஊழியர் டார்சர்.. கடுப்பான இளம் பெண்..!!

மழையால் கடும் சிரமம்

மழையால் கடும் சிரமம்

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தினையும் கண்டுள்ளனர். இதற்கிடையில் இவ்வாறு மழை காலங்களில் நம் மக்கள் அதிகளவில் ஸ்விக்கி சோமேட்டோவினை நாடியுள்ளனர். பொதுவாகவே மழைக்காலங்களில் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிகம் வருவது வழக்கமான ஒரு விஷயம்.

 குதிரையில் டெலிவரி

குதிரையில் டெலிவரி

இந்த நிலையில் மும்பையில் கனமழைக்கு இடையில் ஒரு ஸ்விக்கி ஊழியர், குதிரையினை பயன்படுத்தி உணவு டெலிவரியினை செய்துள்ளார். இந்த செயல் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

 சவால்களுக்கும் மத்தியில் டெலிவரி
 

சவால்களுக்கும் மத்தியில் டெலிவரி

ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தின் போது மும்பையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கமான ஒன்று தான். இதனால் வாகன ஓட்டிகளும், மக்களும் கடும் இன்னல்களை சந்திப்பதும் உண்மை ஹான். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லி மாளாது. ஆனால் இந்த காலகட்டத்தில் ஸ்விக்கி சோமேட்டோ ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு மத்தியில், சரியான நேரத்தில் உணவினை டெலிவரி செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது.

 ஆர்வலர்கள் ஈர்ப்பு

ஆர்வலர்கள் ஈர்ப்பு

இப்படி பல சவால்களுக்கு மத்தியில் தான் என்ன பிரச்சனை வந்தாலு சரி, நான் செய்வதை சரியாக செய்வேன் என ஸ்விக்கி ஊழியர் ஒருவர் குதிரையில் டெலிவரி செய்துள்ளார். இதனால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பயனர்கள் இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Due to heavy rains, Swiggy employee have been making food deliveries on horse

Due to heavy rains, Swiggy employee have been making food deliveries on horse./சேட்டைத்தனத்தின் உச்சம்.. ஸ்விக்கி ஊழியர் செய்த காரியத்தை பாத்தீங்களா..!

Story first published: Monday, July 4, 2022, 12:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.