தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தமிழக அரசின் உயிர் தொழில்நுட்ப கொள்கைக்காக 20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசின் கிரீன் ஹைட்ரஜன், கீரின் அம்மோனியா திட்டம்.. தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
உயிர் தொழில்நுட்ப கொள்கை
2021 – 22 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவு திட்ட உரையில் அறிவித்தவாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உயிர் அறிவியல் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‘உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022’ என்பதனை வெளியிட்டார்கள்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை
அதேபோல் 2021 – 22 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022’ என்பதனையும் வெளியிட்டார்கள்.
தொழில் துறை அமைச்சர் தங்கம்
இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ,தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் செயலாளர் திரு கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாழ்க்கை அறிவியல்
தமிழ்நாடு அரசின் புதிய உயிர் தொழில்நுட்ப கொள்கை தற்போது பல மடங்கு அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் வாழ்க்கை அறிவியலை தொழிலில் மேம்படுத்துவதற்கு தேவை அவசியம் ஏற்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை தரம்
இந்தியாவிலேயே தமிழ்நாடு வாழ்க்கை அறிவியல் என்ற உயிர் தொழில்நுட்ப கொள்கையில் முன்னோடியாக உள்ளது என்றும் உயிர் தொழில்நுட்ப கொள்கையின் அறிவியல் பிரிவின் முக்கியத்துவத்தை தமிழ்நாடு உயர்ந்துள்ளது என்றும் குறிப்பாக சுகாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான தமிழக அரசின் பங்களிப்பை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 பிரிவுகள்
இந்தக் கொள்கையானது 4 பிரிவுகளை கொண்டது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. 1) பயோடெக்னாலஜி மற்றும் பயோ-சேவைகள் 2) மருந்து மற்றும் ஊட்டச்சத்து
தொழில், 3) மருத்துவ சாதனங்கள், மற்றும் 4) மருத்துவ ஜவுளி. இந்த நான்கு பிரிவுகள் மூலம் உயிர் தொழில்நுட்ப கொள்கையின் ஒழுங்குமுறைகளை எளிதாக்குவதிலும், வணிகம் செய்வதை எளிதாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது.
உள்ளூர் உற்பத்தி திறன்
தமிழ்நாட்டை மிகவும் விருப்பமான இடமாக மாற்றவும், உயிரியல், பயோசிமிலர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் தற்போதுள்ள சுற்றுச்சூழலை மேம்படுத்துவதன் மூலம் அதை மிகவும் உகந்ததாக மாற்றவும் அதிகளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் உள்ளூர் உற்பத்தி திறன்களை உருவாக்குதல் மற்றும் மருந்து பொருட்கள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்களின் இறக்குமதியின் அளவை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.20 ஆயிரம் கோடி
இந்த நிலையில் உயிர் தொழில்நுட்ப கொள்கைக்காக ரூபாய் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
TN launches Life Sciences policy to Rs 20,000 crore investment
TN launches Life Sciences policy to Rs 20,000 crore investment| தமிழக அரசின் உயிர் தொழில்நுட்ப கொள்கை… ரூ.20,000 கோடி முதலீடு செய்ய திட்டம்!