தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஏற்கனவே பலவேறு ஒப்பந்தங்கள் மூலம் பல ஆயிரம் கோடி முதலீடுகளையும் ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இன்று சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் கிரீன் அம்மோனியா பற்றியும் பேசப்பட்டது. .
இது தொழில்துறையினை மேம்படுத்த எந்தளவுக்கு உதவிகரமாக இருக்கும்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இதெல்லாம் ஒரு வேலையா..? என்னமா இப்படி பண்றீங்களே மா..!!
வரைமுறை கொள்கை
இதற்கிடையில் இன்னும் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022 மற்றும் தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022 அறிமுகப்படுத்தப்பட்டது. இது மேற்கொண்டு எதிர்காலத்தில் இன்னும் முதலீடுகளை ஈர்க்க காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பசுமை ஹைட்ரஜன்
இதற்கிடையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் உரையில் அதிக கவனத்தினை ஈர்த்தது, உயர்கல்வி படித்தவர்களுக்கும் நிதி நுட்பம், மின் வாகனம், லித்தியம் அயர்ன் பேக்டரி, பசுமை ஹைட்ரஹன் உள்ளிட்ட துறைகளில் சிறிய முயற்சி எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக தூத்துக்குடியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தினை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியது தான்.
சர்வதேச அளவிலான வளர்ச்சி
குறிப்பாக எதிர்காலத்தின் மாபெரும் தேவைகளாக இருக்கும் பசுமை ஹைட்ரஜன், கிரீன் அம்மோனியம் பற்றிய அறிவிப்பு, தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கலாம்.
ஏற்கனவே உலகெங்கிலும் அதிக தேவையுள்ள சிப் செமிகண்டர் உற்பத்திகாக தமிழக அரசு மாபெரும் ஒப்பந்தத்தினை செய்துள்ளது. இந்த நிலையில் பசுமை ஹைட்ரஜனிலும் கவனம் செலுத்துவது தமிழகத்தினை சர்வதேச அளவில் மேம்படுத்த உதவிகரமாக இருக்கும்.
உலகத்தின் தேவை
இன்று உலகின் முக்கிய தேவைகளில் ஒன்று பசுமை ஹைட்ரஜன். கார்பன் இல்லாத அல்லது பசுமை ஹைட்ரஜன் உலகின் மாற்று எரியாற்றல் பட்டியலில் முகிய இடம் பிடித்துள்ளது. இதனை உற்பத்தி செய்வதும் எளிது என்பதால், மத்திய அரசும் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
இந்தியாவின் நிலை
இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட எரியாற்றலில் சுமார் 40% புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகும். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. ஆனால் பெரிய அளவிலான ஆற்றல் சேமிப்பு வசதி இல்லாமல் புதுப்பிக்கவல்ல ஆற்றல், வழக்கமான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற்றாக இருக்க முடியாது.
சிறந்த மாற்று
ஆனால் பசுமை ஹைட்ரஜனை மிகப் பெரிய அளவில் சேமிக்க முடியும். நீண்ட தூரம் செல்லும் டிரக்குகள், பேட்டரியால் இயங்கும் கார்கள், பெரிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், ரயில்கள் போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாக இருக்கும். மொத்தத்தில் எதிர்காலத்தில் சிறந்த மாற்றாக இருக்கும்.
Tamilnadu investment conclave 2022: Government of Tamil Nadu’s Green Hydrogen, Green Ammonia Project
Tamilnadu investment conclave 2022: Government of Tamil Nadu’s Green Hydrogen, Green Ammonia Project/தமிழக அரசின் பசுமை ஹைட்ரஜன், கீரின் அம்மோனியா திட்டம்.. தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?