தமிழ்நாட்டில் 3000 கோடி முதலீடு செய்யும் டாடா.. எந்த மாநிலத்திற்கு ஜாக்பாட்..!

சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த முதலீட்டு மாநாட்டில் சுமார் 60 நிறுவனங்களுடன் தமிழக அரசு புதிதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வர உள்ளது. இதன் வாயிலாக 74,898 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் முக ஸ்டாலின் டாடா குழுமத்தின் முக்கியமான முதலீடு மற்றும் திட்டம் குறித்துப் பேசினார்.

தமிழ்நாடு முதலீட்டு மாநாடு.. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..?

டாடா பவர்

டாடா பவர்

இந்தியாவின் மிகப்பெரிய மின்சாரத் துறை நிறுவனமான டாடா பவர் தமிழ்நாடு அரசுடன் சுமார் 3000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் பிரம்மாண்ட முதலீட்டுத் திட்டத்திற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

சோலார் செல் மற்றும் சோலார் மாடியூல்

சோலார் செல் மற்றும் சோலார் மாடியூல்

இந்த ஒப்பந்தம் மூலம் டாடா குழுமத்தில் வேகமாக வளர்ந்து வரும் டாடா பவர் தமிழ்நாட்டில் 4 ஜிகாவாட் சோலார் செல் மற்றும் 4 ஜிகாவாட் சோலார் மாடியூல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை டாடா அமைக்க உள்ளது.

கிளீன் எனர்ஜி
 

கிளீன் எனர்ஜி

டாடா பவர் நிறுவனமும் சரி, தமிழ்நாடு அரசும் சரி கிளீன் எனர்ஜி உற்பத்தி உற்பத்திக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கும் வேளையில், இந்த 3000 கோடி முதலீட்டுத் திட்டம் இரு தரப்புக்கும் முக்கியமானதாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும்.

கிளீன் எனர்ஜி

கிளீன் எனர்ஜி

டாடா பவர் நிறுவனமும் சரி, தமிழ்நாடு அரசும் சரி கிளீன் எனர்ஜி உற்பத்தி உற்பத்திக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கும் வேளையில், இந்த 3000 கோடி முதலீட்டுத் திட்டம் இரு தரப்புக்கும் முக்கியமானதாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும்.

3000 கோடி ரூபாய் முதலீடு

3000 கோடி ரூபாய் முதலீடு

டாடா பவர் திருநெல்வேலி-யில் தொழிற்சாலையை அமைக்க அடுத்த 16 மாதத்தில் பல பிரிவுகளாக 3000 கோடி ரூபாய் முதலீட்டை செலுத்த உள்ளது. இதோடு இந்தத் தொழிற்சாலை வாயிலாக 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

இந்த ஒப்பந்தம் முக ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரான எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் டாடா பவர் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். பிரவீர் சின்ஹா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தமிழ்நாடு உடன் 4 மாநிலங்கள் போட்டி.. மகாராஷ்டிரா வேற இருக்குதே..! எதற்காக தெரியுமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Power set up mega solar plant in Tamil Nadu with Rs 3,000 crore investment

Tata Power set up mega solar plant in Tamil Nadu with Rs 3,000 crore investment தமிழ்நாட்டில் 3000 கோடி முதலீடு செய்யும் டாடா.. எந்த மாநிலத்திற்கு ஜாக்பாட்..!

Story first published: Monday, July 4, 2022, 20:13 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.