பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் பகுதியில் உள்ள ரெட்வுட் க்ரோவில் இருக்கும் மூன்று மாடி குடியிருப்பில் இன்று காலை மிகப் பயங்கரமான வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்(Bedford) பகுதியில் 20 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட மூன்று மாடித் தொகுதியில் திங்கள் கிழமை காலை பயங்கர வாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்பு விபத்தில் கட்டிடம் முழுவதும் தீ பரவிய நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் கூரையின் பெரும்பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இதில் இரண்டு பேர் வரை படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Fire in bedford 😳 pic.twitter.com/Oe90UshjgJ
— 𝘾𝙎⁵⁵ (@Lacazetteeeee) July 4, 2022
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை குழுவினர், தீயிணை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்பட்டுள்ள கட்டிடத்தின் அருகில் வசிக்கும் பொதுமக்களை தங்களது வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறும் அவசரகால சேவை குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுத் தொடர்பாக பெட்ஃபோர்ட்ஷையர்(Bedfordshire) தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்த தகவலில், விபத்து இடத்தில் ஆறு தீயணைப்பு உபகரணங்களும், இரண்டு தண்ணீர் கேரியர்களும் இருப்பதாக தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய போர் நிறைவடையும் நாள்…உக்ரைன் தலைவரின் பகீர் தகவலால் பரபரப்பு!
விபத்து குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் PA-விடம் தெரிவித்த தகவலில், நான் நகருக்கு சென்றுக் கொண்டு இருந்த போது கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் வருவதை பார்த்தேன், மேலும் இரண்டாவது மாடியில் இருந்து ஒருவர் குதித்ததையும் பார்த்தேன் எனத் தெரிவித்துள்ளார்.