துள்ளி குதிக்கும் தங்கம் விலை.. சாமானிய மக்கள் கவலை.. இனி என்னவாகும்?

கடந்த வார இறுதியில் தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கு விதமாக சரிவினைக் கண்டு முடிவடைந்திருந்தது. இது இன்னும் சரிவினைக் காணலாமோ என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

தொடர்ந்து சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்து வந்தாலும், மற்ற பொருளாதாரம் குறித்த காரணிகள் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தங்கம் விலையானது ஏமாற்றம் கொடுக்கும் விதமாக தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

தங்கம் விலை அடுத்த வாரம் எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்?

தங்கத்திற்கு எதிரான காரணிகள்

தங்கத்திற்கு எதிரான காரணிகள்

எனினும் தொடர்ந்து மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள கொரோனா, உலகம் முழுக்க அதிகரிக்க ஆரம்பித்துள்ள பணவீக்கம், ரெசசசன் அச்சம், உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை, கச்சா எண்ணெய் விலை என பலவும் கவலையளிக்கும் காரணிகளாக உள்ளன. இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்பது, நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

எனினும் இந்த வட்டி அதிகரிப்பே பொருளதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அமெரிக்க மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் என்ன முடிவு எடுக்கப் போகின்றனவோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் மதிப்பு சரிவு
 

ரூபாய் மதிப்பு சரிவு

டாலர், பத்திர சந்தை என்பது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தினாலும், பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு எதிராகவே உள்ளன. ஆக விலை குறைவானது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது. இந்தியாவில் இறக்குமதி வரியும் அதிகரித்துள்ளது. இது தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம்?

சர்வதேச சந்தை நிலவரம்?

தங்கம் விலையியானது தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 11.95 டாலர்கள் அதிகரித்து, 1813.45 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதனை போலவே, வெள்ளி விலையும் 0.68% அதிகரித்து, 19.800 டாலராக காணப்படுகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 348 ரூபாய் அதிகரித்து, 52,265 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளியின் விலை கிலோவுக்கு 111 ரூபாய் அதிகரித்து, 58,286 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து, 4810 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து, 38,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 5248 ரூபாயாகவும், இதே சவரனுக்கு , 41,984 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 50 பைசா அதிகரித்து, 64 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 640 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 64,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

  • சென்னையில் இன்று – ரூ.48,100
  • மும்பை – ரூ.48000
  • டெல்லி – ரூ.48000
  • பெங்களூர் – 48,050
  • கோயமுத்தூர், மதுரை, என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,100

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price updates: gold prices to remain subdued amid global macro concerns

gold price updates: gold prices to remain subdued amid global macro concerns/துள்ளி குதிக்கும் தங்கம் விலை.. சாமானிய மக்கள் கவலை.. இனி என்னவாகும்?

Story first published: Monday, July 4, 2022, 13:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.